இன்ஜி., முதலாமாண்டு வகுப்பு இம்மாத இறுதியில் துவங்கும் - அமைச்சர் பொன்முடி! இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழக உயர்கல்வி துறை சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம் நான்கு சுற்றுகளில், இரண்டாம் சுற்று மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன. சேர்க்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி: இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங்கில், முதலாம் சுற்றில் 10 ஆயிரத்து 351 பேர், கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். இரண்டாம் சுற்றில் 31 ஆயிரத்து 94 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது; 23 ஆயிரத்து 458 பேர் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்தனர். அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. அவர்களில், 14 ஆயிரத்து 153 பேர் தங்கள் ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளனர். இரண்டாம் சுற்றில் ஒதுக்கீடு பெற்றவர்கள், வரும் 10ம் தேதிக்குள், கல்லுாரிகள் மற்றும் கவுன்சிலிங் உதவி மையங்களில் கட்டணம் செலுத்தி, தங்களின் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மூன்றாம் சுற்று கவுன்சிலிங், அக்.,15ல் துவங்கும். இன்ஜினியரிங் முதலாம் ஆண்டில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு,...
Posts
Showing posts from October 2, 2022
- Get link
- X
- Other Apps
யோகா படிப்பில் சேர அக்டோபர் 19 வரை விண்ணப்பம்! யோகா மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அக்., 19 வரை விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்ட செய்தி குறிப்பு: அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், 2022 - 23-ம் ஆண்டுக்கான இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்குக்கான விண்ணப்பப்பதிவு துவங்கி உள்ளது. பிளஸ் 2வில் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அக்., 19க்குள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், கவுன்சிலிங் தொடர்பான தகவல்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம், சென்னை - 106 என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரடியாகவோ அக்., 19 மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. B.N.Y.S - இளநிலை இயற்கை மருத்துவம...
- Get link
- X
- Other Apps
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்ப...
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடிக் கல்வி... தன்னார்வலர்களுக்கு விருது! சேலம் மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்கள் உட்பட 662 பேருக்கு பாராட்டி மாநில அளவிலேயே முதன் முதலாக முப்பெரும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைப்பெற்றது. முப்பெரும் விருது விழா இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழ்நாடு அரசு துவக்கி வைத்தது. இதனிடையே சேலம் மாவட்டம் எப்பபாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகேயுள்ள மூலப்பாதை ல் கல்லூரியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதிலும் சிறப்பாக பணியாற்றி வரும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட 662 பேருக்கு மாநில அளவிலேயே முதன்முதலாக கொங்கணாபுரம் டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் பாராட்டி முப்பெரும் விருது வழங்கும் விழா மாவட்ட உதவி திட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது இந்நிகழ்ச்சியில் புது டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான நாராயணி சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து அனைவருக்க...
- Get link
- X
- Other Apps
தகைசால் பள்ளிகளாக தரம் உயா்த்தும் பணிகள் தொடக்கம் தமிழகத்தில் 28 அரசுப் பள்ளிகளை தகைசால் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்தபோது அங்குள்ள தகைசால் பள்ளிகள், மாதிரி பள்ளிகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து இதுபோன்ற பள்ளிகள் தமிழகத்திலும் தொடங்கப்படும் என அவா் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் தொடக்கிவைத்தாா். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக ரூ.170 கோடியில் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. தகைசால் பள்ளிகள் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சோ்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி...
- Get link
- X
- Other Apps
NEET: 7.5% உள்-ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களின் முதலாமாண்டு முடிவுகள் சொல்வதென்ன? இந்திய அளவில் உள்ள பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கான உள்நுழைவு தகுதித் தேர்வாக நீட் உள்ளது. இத்தேர்வின் மூலம் 85% இளநிலை மருத்துவ இடங்கள் அம்மாநிலத்தின் மாணவர்களுக்காகவும், மீதமுள்ள 15% இளநிலை மருத்துவ இடங்கள் அகில இந்திய மாணவர்களுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன. நம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2020 அக்டோபரில் தமிழக அரசால் புதிய சட்டம் இயற்றப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கென மாநில மருத்துவ இடங்களில் 7.5% உள் ஒதுக்கீடு தரப்பட்டது. அதன்படி, நீட் தேர்வில் தகுதி பெற்ற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களால் இந்த 7.5% உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படும். நீட் தேர்வைப் பற்றியும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டைப் பற்றியும் பலதரப்பட்ட வாதங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. இந்நிலையில்தான் முதலாம் ஆண்டு மருத்துவத் தேர்வு முடிவுகளும், அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விகிதமும் கவனம் பெறுகின்றன. முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவுகளின் படி 7.5% உ...
- Get link
- X
- Other Apps
வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 73.99 லட்சம் போ்: தமிழக அரசு தமிழகத்தில் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 73.99 லட்சமாக உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பள்ளிப் படிப்பை முடித்தோரில் தொடங்கி பட்டப் படிப்பை நிறைவு செய்தோா் வரையில் தங்களது பெயா் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் மொத்தமாக பதிவு செய்தோரின் எண்ணிக்கை 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 ஆகும். அவா்களில் ஆண்கள் 34 லட்சத்து 53 ஆயிரத்து 380. பெண்கள் 39 லட்சத்து 45 ஆயிரத்து 861. மூன்றாம் பாலினத்தவா் 217.