Posts

Showing posts from October 1, 2022
Image
  கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அக்டோபர் 6 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, சான்றிதழ் நகல் பதிவேற்ற அக்டோபர் 3 இரவு 8 மணி முதல் அக்டோபர் 6 இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் https://adm.tanuvas.ac.xn--in--wmj1j/ விண்ணப்பம் திருத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
Image
  தேர்வு எழுதி வீடு திரும்பிய மாணவர்களின் வினாத்தாளை வாங்கி மாவட்ட ஆட்சியர் கேள்வி! பதில் தெரியாமல் தேர்வெழுதிய முறையினை கூறிய மாணவர்கள்!!! தருமபுரி மாவட்டம் , காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , பிக்கனஅள்ளி ஊராட்சியில் இன்று ( 28.09.2022 ) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது கண்டறியப்பட்ட பின்வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒருவார காலத்திற்குள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டியது : காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , பிக்கனஅள்ளி ஊராட்சியில் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த பின்வரும் மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு காலாண்டுத் தேர்வு கணக்குத் தாள் தேர்வினை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மாணவர்களை சந்தித்து தேர்வு குறித்து வினாத்தாளிலிருந்து கணிதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதில் மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் அறிவு இல்லை என தெரிய வந்தது. இவ்வாறான நிலையில் , மாணவர்களிடம் எப்படி தேர்வு எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது , தொடர்புடைய ஆசிரியர் கரும்பலகையில் வினாவிற்கான பதிலை எழுதி வைத்ததாகவும் , அதைப் பார்த்து தேர்வு எழுதி திரும்பியதாகவும் பதிலளித்தனர். மாணவர்களுக்கு க...
Image
  பொது மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை 2022 வி ண்ணப்பிக்க கடைசிநாள்: 03.10.2022 2022-23ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் சென்ற 23ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.  மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் சென்ற 7 ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பபதிவு சென்ற 23ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் tnhealth.tn.gov.in அல்லது tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர...