Posts

Showing posts from September 29, 2022
Image
  TNPSC : வரும் 14-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்.! தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு.! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..‌.! சேலம்‌ மாவட்டத்தில்‌, ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளுக்கான தேர்வுக்குத்‌ தயாராகும்‌ தேர்வர்கள்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தின்‌ மூலமாக நடத்தப்படும்‌ பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ (TNPSC) ஒருங்கிணைந்த புள்ளியியல்‌ சார்நிலைப்‌ பணிகளில்‌ அடங்கிய உதவி புள்ளியியல்‌ ஆய்வாளர்‌, கணக்கிடுபவர்‌ மற்றும்‌ புள்ளியியல்‌ தொகுப்பாளர்‌ ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல்‌, கணிதம்‌, கணினி அறிவியல்‌, பொருளாதாரம்‌ ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 14:10.2022 ஆகும்‌. இதற்கான எழுத்துத்தேர்வு வருகின்ற 29.01.2023 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான இலவசப்‌ பயிற்சி வகுப்புகள்‌ மற்றும்‌ வழிகாட்டுதல்‌ நிகழ்ச்ச...
Image
  அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வெளியீடு... அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.!!!! அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகளில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பு படித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல்காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது செமஸ்டர் தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைகத்தின் கீழ் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் http://www.annauniv.edu/nwsnew/என்ற அதிகாரப்பூர்வமான தளத்தில் தங்களின் ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  TNPSC குரூப் 2 &2A மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு.! தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5413 பதவிகளுக்கு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2A முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிந்து மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இத்தகைய சூழலில், குரூப்-2 மற்றும் குரூப் 2A தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாகவும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Image
 ' டிஎன்பிஎஸ்சி மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களை நியமிக்க வேண்டும்'.. டாக்டர் ராமதாஸ் நியாயவிலைக் கடை பணியாளர்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நேர்காணலின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காமல் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிகளுக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் மாவட்ட அளவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது, இந்த நியமனங்கள் சரியாக நடக்குமா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் 25,044 முழு நேர நியாயவிலைக் கடைகள் 10,279 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என ...