Posts

Showing posts from September 28, 2022
Image
  புதிதாக 1024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு, 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.  அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதின் தொடக்கமாக 11 நபர்களுக்கு முதல்வர் தனது கையால் பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமை...
Image
  ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப உத்தரவு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..! ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  விற்பனையாளர் பணிக்கு ப்ளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி, கட்டுனர் பணிக்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பு: தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதி படி ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் குழுவில் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் அமைக்கப்படும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தெரிவிற்கான சரிபார்ப்புக் குழுவில் (Screening Committee) மாவட்ட வழங்கல் அலுவலரால் நியமனம் செய்யப்படும் வட்ட வழங்கல் அலுவலரும் உறுப்பினராக இருக்கின்றனர். ம...
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை: ஐகோர்ட் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் உள் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை: ஐகோர்ட் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல். முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி (வன்னியர்) மற்றும் எம்பிசி - சீர்மரபினர் என தனித்தனியாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தர...