9 ஆண்டுகளுக்குப்பிறகு 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார். தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, அரசு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்ற உதவிப்பேராசிரியர்கள் பணியை வரைமுறைபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். கடந்து 2012ஆம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 உதவிப்பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவதாகவும், அவர்களை அப்போதே பணி நிரந்தரம் செய்வோம் என்று கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. ஆனால், அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாத காரணத்தினால் இன்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் மேலும் பேசிய அவர், பல்கலைக்கழகங்களுக்குக்கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் ரூ.152 கோடி செலவை அரசே ஏற்கும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், கல்லூரிகளுக்கு பணமும் ஒதுக்கவில்லை. அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று விமர்சனம் செய்த அமைச்சர் அந்த கல்லூரிகள் அரசு கல
Posts
Showing posts from September 26, 2022
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தலைவர் லதா, மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், ஆசிரியர் பணி நியமனங்கள் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி துறையின் கீழ் செயல்படும், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, ஆசிரியர்கள், பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆசிரியர் பணியில் சேருவதற்கான, 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வும் நடத்தப்படுகிறது.தற்போதைய நிலையில், டி.ஆர்.பி., சார்பில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளின், 1,056 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள், 'டெட்' தேர்வு, அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 பேராசிரியர் இடங்களை நிரப்ப, உயர் கல்வித்துறை கடிதம் அளித்துள்ளது. இந்த பணிகளும் டி.ஆர்.பி.,யால் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில், டி.ஆர்.பி., தலைவராக பதவி வ