
பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடுகளைத் தடுக்க பணியாளர்களை மாற்றம் செய்ய உத்தரவு. பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறையில் ஜூன் 1ஆம் தேதி , மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு மாவட்ட அளவில் முதன்மைக்கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். ஜூன் 1ஆம் தேதி நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு, பொதுப் பணியாளர்களைத் தங்க...