
அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் எனவும், அரசுப் பணிக்கான 60 வயதை கடந்தவர்கள் 5,590 பேர் உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, கடந்த மாதம் (ஆக.31) ஆம் தேதி வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவு செய்தவர்ளின் மொத்த எண்ணிக்கை 73,99,512. இவற்றில் ஆண்கள்- 34,53,380, பெண்கள்- 39,45,861, மூன்றாம் பாலினம்- 271 என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பதிவு செய்தவர்களின் வயது வாரியான விவரங்களின் படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் -23,01,800 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள்-29,88,001 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் மேலை நாட்டினர்கள்- 18,68,931 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது ம...