.jpg)
எங்க உயிரை வாங்குறாங்க.. C.M , P.Mக்கு எக்ஸாம் வையுங்க..! சீமானின் புத்தி ஐடியா .!! செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், உலகத்திலே கல்வியில் முதல் இருக்கின்ற நாடு தென் கொரியா. 8 வயதில் தான் பிள்ளைகளில் ஒன்றாம் வகுப்பிலே சேர்க்கிறார்கள். நீங்கள் அந்த 8 வயதில் என்னை பொதுத் தேர்வு எழுத சொல்கிறீர்கள், இதெல்லாம் என்ன கொடுமை என்று பாருங்கள் ? நீட் எழுதுவார்கள், பொது தேர்வு எழுதுவார்கள், வழக்கறிஞருக்கு எழுதனும், நீதிபதிக்கு வர வேண்டும் என்றால் எழுதணும், போலீசாக வர வேண்டும் என்றால் தேர்வு எழுதணும், எல்லாவற்றிற்கும் தேர்வு எழுதணும். ஆனால் நாட்டை ஆளுகின்ற முதலமைச்சர், அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள் நீங்கள் எந்த தேர்வு எழுதவில்லையே? எப்படி எல்லாவற்றிற்கும் தேர்வு. உள்ள போவதற்கு தேர்வு, வெளியில் வருவதற்கு தேர்வு, அப்போ நாட்டை ஆளுகின்ற பிரதமர் ஒரு தேர்வு எழுதினால் என்ன? சமூகம், அறிவியல், பொருளாதாரம், வேளாண்மை, வரலாறு, இலக்கியம் இதில் எல...