Posts

Showing posts from September 21, 2022
Image
  சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர இன்று முதல் அக் .12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, படிப்பில் சேர இன்று முதல் அக் .12 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளனர்.  www.tnhealth.tn.gov.in என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.  முதுகலையில் எம்டி யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப்படிப்பு , நர்சிங் தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி, பட்டயப்படிப்பில் ஒருங்கிணைந்த மருந்தாளுநர், நர்சிங்தெரபி ஆகியவற்றில் சேர்வதற்கு செப்டம்பர் 21 ந் தேதி முதல் அக்டோபர் 12 ந் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.மருத்துவப் பட்டப்படிப்புகளான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் சேர 12 ம் வ
Image
  இதுவரை கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர 9,335 பேர் விண்ணப்பம் த மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு 9,335 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் கால்நடை மருத்துவப்படிப்பிற்கு 7,825 மாணவர்களும், பி.டெக் படிப்பிற்கு 1,510 மாணவர்களும் என மொத்தம் 9,335 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 26ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகள் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. கடந்தாண்டைப் போலவே அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு 2022-23ஆம் கல்வியாண்டிலும் வழங்கப்படும். கால்நடை மருத்துவப் படிப்பிற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்
Image
 ` பாடம் சொல்லிக்கொடுக்க நேரமில்லை...' புலம்பும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - என்ன காரணம்?! தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தநிலையில், பள்ளி மேலாண்மைக்குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ளப் பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இப்பணி இடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இச்சூழலில் தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் விவரம் சேகரிப்பு உள்ளிட்ட பணிகள் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஒதுக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் இதுபோன்ற பணிகள் வரும் பட்சத்தில் அவற்றையும் ஆசிரியர்கள் செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தச்சூழலில், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சமீபகாலமாக மாணவர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது. அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோ
Image
  தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை! தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பிரவீன்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
Image
  செயல் அலுவலர் பதவிக்கான கீ ஆன்சர் வெளியீடு டிஎன்பிஎஸ்சி குரூப் 8 பணியில் அடங்கிய செயல் அலுவலர்(கிரேடு 4) பதவியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த 11ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.இறுதி செய்யப்பட்ட விடைகள், தேர்வுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
Image
  செஞ்சி கல்வி மாவட்டம் திண்டிவனத்துக்கு மாற்றம், ஆசிரியா்கள் அதிருப்தி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலகம் திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக மாற்றப்பட்டது.  விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்த செஞ்சி மாவட்டக் கல்வி அலுவலகம் திண்டிவனம் கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலமாக மாற்றப்பட்டது. இதனால், செஞ்சி கல்வி மாவட்டத்தைச் சோந்த ஆசிரியா்கள் கடும் அதிருப்தியடைந்தனா். கடந்த 2018-ஆம் ஆண்டுக்கு முன்பு தொடக்கக் கல்வி அலுவலகம் விழுப்புரத்திலும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் திண்டிவனத்திலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு கடலூா், விழுப்புரம் மாவட்டங்களைச் சோத்து மாவட்டக் கல்வி அலுவலகம் கடலூரிலும் இயங்கி வந்தன.  நிா்வாக வசதிக்காக இவை அனைத்தும் மாற்றப்பட்டு, தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா் நிலை, மேல்நிலைப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என வல்லம், செஞ்சி, மேல்மலையனூ