Posts

Showing posts from September 20, 2022
Image
  செப்டம்பர் 22 முதல் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.! வரும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் எனும் பொதுமருத்வ படிப்பு மற்றும் பி.டி.எஸ் எனும் பல்மருத்துவ படிப்பு ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப தேதியை தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றியடைந்த மாணவர்கள் , இம்மாதம் 22ஆம் தேதி முதல் தமிழக அரசு மற்றும், சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்கள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளர். இதற்கான முழு அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். இதன் விண்ணப்ப இறுதி தேதி அக்டோபர் 3ஆம் தேதிஎனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.org ஆகிய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Image
  தமிழக அரசுப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் கற்பித்தல் பணிகளை மட்டும் ஆசிரியர்களுக்கு கொடுங்கள்" - உணருமா தமிழக பள்ளிக் கல்வித் துறை? தமிழக அரசுப் பள்ளியில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தற்போது பொது விவாதமாக மாறியுள்ளது. தலைநகர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவது கல்வியாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரையும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றுவதிலும் அரசு தரப்பில் தொடர்ந்து தயக்க நிலை நிலவுகிறது. மேலும், கிராமப்புறங்களில் இன்னமும் பல வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியரே பாடங்கள் எடுக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. இத்துடன் பள்ளிக் கல்வித் துறையில், அரசுப் பள்ளி மாணவர்களின் சுயவிவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக் கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் ஆசிரியர்கள்தான் பதிவேற்றுகின்றனர். மேலும் பள்ளி சார்ந்த ஊழியர்கள் பற்றாக்குறையால் அங்குள்ள பணிகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் சூழல் அங்கு உள்ளது. இதனால் மாணவர்களுடன் ஆசிரியர்கள் செலவிடும் கற்றல் - கற்பித்தல...
Image
  B.V.Sc. & A.H., B.Tech படிப்புகள்: செப்.26 முதல் விண்ணப்பம்... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!! தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவ படிப்புக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் https://adm.tanuvas.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.