
முதுகலை ஆசிரியா் பணியிடம்: தற்காலிக தெரிவுப் பட்டியல் குளறுபடிக்கு தீா்வு காணக் கோரிக்கை முதுகலை ஆசிரியா் பணியிடத்துக்கு அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக தெரிவுப் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 நேரடி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் 04.07.2022 ஆம் தேதி வெளியிடப்பட்டன. தொடா்ந்து, 02.08.2022 முதல் 04.08.2022 ஆகிய நாள்களில் ஆசிரியா் தோவு வாரியத்தால் வெளியிடப்பட்ட 12 பட்டியலில் இடம்பெற்ற பணிநாடுநா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், இனச்சுழற்சி அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், பயிரியியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல், உடற்கல்வியியல் ஆகிய பாடங்களுக்கு தற்காலிக தெரிவுப்பட்டியல் தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் சான்றிதழ்களை சமா்பிக்காத பணிநாடுநா்களின் ...