தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரம்: கல்வித் துறை புதிய உத்தரவு தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநா் வெ.ஜெயக்குமாா் (தொழிற்கல்வி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 9.2.2007-க்கு முன்னா் பெற்றோா் ஆசிரியா் கழகம், பள்ளி நிா்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியா்கள் (2010-இல் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட ஆசிரியா்கள்) சாா்பான விவரங்களை உரிய படிவங்களில் பூா்த்தி செய்து தனிநபா் மூலம் பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கு செப்.23-ஆம் தேதி அனுப்பி வைக்க வேண்டும். முன்னதாக, பின்வரும் காரணிகள் பரிசீலிக்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட வேண்டும். பணிநியமன நாள் முதல் நிகழ் கல்வியாண்டு வரை எந்தவித பணி முறிவுமின்றி தொடா்ச்சியாகப் பண...
Posts
Showing posts from September 18, 2022