தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் - முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல் பணி நிரந்தரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதலமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு 16ஆயிரம் பேர் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி படங்களை நடத்த பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் கடந்த 10 ஆண்டுகளில் மரணம், ஓய்வு என 4ஆயிரம் காலியிடம் ஆகிவிட்டது. இதனால் தற்போது 12ஆயிரம் ஆசிரியர்களே பணியில் உள்ளார்கள். இந்த பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது 181வது வாக்குறுதியை கொடுத்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்து இப்போது 16 மாதங்கள் ஆகியும், இன்னும் அதிமுக அரசில் இருந்த போது வழங்கிய ரூ 10ஆயிரம் சம்பளமே, திமுகவும் வழங்கி வருகிறது. 10ஆயிரம் சம்பளம் கொடுக்க பணியில் உள்ள 12ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ140 கோடி செலவாகிறது. திமுக கொடுத்த வாக்குறுதியை தான், முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம். முதல்வரிடம் பலமுறை கோரிக்கை கொடுத்து விட்டோம். அதன...
Posts
Showing posts from September 13, 2022
- Get link
- X
- Other Apps
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் பணி-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தலைமைச் செயலகத்தில் பணியாற்ற செய்தியாளர்கள் தேவை என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் பணியாற்ற 9 செய்தியாளர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 17 முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்படும். டிசம்பர் 21-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் சுருக்கெழுத்து & தட்டச்சுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். தேர்வாகும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விரிவான தகவல்களுக்கு https://apply.tnpscexams.in/ என்ற இணைதளத்தைப் பார்க்கவும்.
- Get link
- X
- Other Apps
CSIR NET Admit Card 2022: யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி? 2022 ஜூன் யுஜிசி நெட் தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று (13-ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த தேசியத் தேர்வுகள் முகமை முடிவு செய்தது. ...