தமிழகத்தில் செப்.15 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம் நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினை (Statement of Mark) பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from September 12, 2022
- Get link
- X
- Other Apps
NEET 2022 Result: நீட் தேர்வில் 35% அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி: இந்த மாவட்டத்தில் 7% மட்டுமே- வெளியான புதுத் தகவல்! நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாக புதிய விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுத 17,572 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த 12,840 மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி ( 35% )அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் தேர்வு எழுதிய 131 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 100% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை நிலவரம் சென்னையில் நீட் தேர்வை 172 மாணவர்கள் எழுதிய நிலையில், 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021ஆம் ஆ...
- Get link
- X
- Other Apps
அரசு கலைக் கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலி: கல்வித்தரம் எப்படி உயரும்?- ராமதாஸ் கேள்வி தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வளவு காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது என்பதை அறிந்திருந்தும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்பாண்டில் முதலாமாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சு...