
தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: விழுப்புரத்தில் மறியல் விழுப்புரம் : விழுப்புரத்தில் குரூப் 7 தேர்வுக்கு தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஹிந்து அறநிலையத் துறையில் உள்ள செயலாக்க அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்காக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 7 தேர்வு நேற்று நடந்தது. விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லுாரி மற்றும் தெய்வானை அம்மாள் கல்லுாரி என 2 மையங்களில் தேர்வு நடந்தது.தேர்வு, காலை 9:30 மணிக்குத் துவங்கி மதியம் 12:30 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் காலை 9:00 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.சட்டக் கல்லுாரி தேர்வு மையத்திற்கு காலை 9:00 மணிக்கு மேல் தாமதமாக வந்த தேர்வர்களை போலீசார் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து கேட்டை பூட்டினர். தேர்வு எழுத வந்த 50க்கும் மேற்பட்டோர் தேர்வு அறைக்குச் செல்ல முடியாமல் காத்திருந்தனர்.தங்களை அனுமதிக்கும்படி 9:25 மணிக்கு விழுப்புரம் - திருச்சி சாலையில், வீரன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அரசு நிர்ணயித்த கால ந...