Posts

Showing posts from September 9, 2022
Image
  குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றம்- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் இந்த தேர்வு நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குரூப்-1 பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ந் தேதிக்கு பதில் நவம்பர் 19ந் தேதி தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு தேதி் மாற்றப்பட்டுள்ளது.
Image
  பள்ளி தலைமையாரியர்கள் கட்டாயம் பாடம் எடுக்க வேண்டும் - புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..! புதுச்சேரி மாநில பள்ளி கல்வித் துறை, 'தலைமை பொறுப்பில் இருந்தாலும் பள்ளி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ் 712 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், இந்தப் பள்ளிகளில் 4 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தந்த பள்ளிகளின் நிர்வாக பொறுப்புகளை, பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், தலைமையாசிரியர், துணை தலைமையாசிரியர், ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர்கள், கவனித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பள்ளியில் தலைமை பொறுப்பினை கவனித்து வந்தாலும், அவ்வப்போது மாணவர்களுக்கு வகுப்புகளும் எடுக்க வேண்டும். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை, கடந்த 2000ம் மற்றும் 2011ம் ஆண்டில் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. ஆனால், தலைமை பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்ட நேரத்தில் கூட, வகுப்பிற்கு சென்று பாடங்களை நடத்தவில்லை. எங்களுக்கு நிர்வாக பணி ம
Image
 `நீட் தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்ன?!' - அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன விளக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதியில் தீர்க்க வேண்டிய முக்கியப் பிரச்னைகளை, மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பிரச்னைகளை அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``இலவசத் திட்டங்கள் என்பவை சமூகநீதிக்குத் தொடர்புடையவை. சமூகநீதி அடிப்படையில், அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்கவே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகள் இந்த கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது. இன்றைக்கு அதைத் தாண்டி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படித்துவருகின்றனர். மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்ட காலத்தைத் தற்போதுதான் உடைத்திருக்கிறோம். மாணவர்கள் தற்ப
Image
  தற்காலிக ஆசிரியர் சிக்கலுக்கு விரைவில் வருகிறது தீர்வு தற்காலிக ஆசிரியர்களை வைத்து, பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதில் நீடித்து வந்த சிக்கலுக்கு, விரைவில் தீர்வு கிடைக்கும் வகையில், காலிப்பணியிடங்கள் திரட்டும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இம்மாத இறுதி வரை, சேர்க்கை நீட்டித்துள்ள நிலையில், பல பள்ளிகளில் புதிய சேர்க்கை நடத்த முடியாத அளவுக்கு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு நீடித்து வந்தது.  துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, டெட் முடித்தோரை சமீபத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்தனர். இதேபோல், மேல்நிலை வகுப்புகளுக்கும், தற்காலிக ஆசிரியர்கள் கொண்டு, கற்பித்தல் பணி தொடர்வதால், தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் ஏற்படும் என, தலைமையாசிரியர்கள் ஆதங்கப்பட்டனர்.  ஏனெனில், அவர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்குவதால், பள்ளி நேரத்தை தாண்டி, சிறப்பு வகுப்புகள் கையாள்வதில்லை. அதனால், கல்வியில் பின்தங்கியோரின் கற்றல் நிலையை மேம்படு