
சீருடைப் பணியாளர் தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி: செப்.14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர செப்.14-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குடிமைப்பணிகள் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தமிழக அரசின்சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வில் இப்பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலைசிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவை www.civilservicecoaching.com என்ற ...