
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் பொறியியல், மருத்துவ உயர் படிப்பு சேர்க்கை தள்ளிப்போகிறது. இந்நிலையில், எப்போது நீட் தேர்வு முடிவு வெளியாகும் என மாணவ-மாணவிகள் ஆவலோடு காத்திருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் நாளை (7-ந்தேதி) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவி...