அரசின் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித்துறை இல்லை.. மூட்டைப் பூச்சிக்கு பயந்து.? பங்கப்படுத்திய ஓபிஎஸ். அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ததை திரும்பப் பெறுமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமெனில் அங்கு தொழிற்கல்வி வளர்ச்சி பெற வேண்டும், இப்படிப்பட்ட தொழிற்கல்விக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முயற்சிப்பது வேதனை அளிக்கிறது, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவுகளை அடியோடு மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அதன்மூலமாக தற்காலிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை மூடுமாறும் அங்கு 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப் பிரிவில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்யுமாறும், அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி வேறுபாடப்பிரிவுக்கு மாற்றுமாறும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதனடிப்படை...