
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு வெளியானது! நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதேபோன்று, குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அதேபோன்று, 7138 குரூப் 4 லிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மன உளைச்சலில் இருந்து வந்தனர். டிஎன்பிஎஸ்சி ஆள் சேர்க்கையில் பெண்களுக்கு அளிக்கப்பட இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில்...