.webp)
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு; மத்திய அரசு திட்டம் Govt proposes a new regulator for 'uniformity' in all board exams: மாநில மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் தற்போது பல்வேறு தரநிலைகளை பின்பற்றி வருவது, மதிப்பெண்களில் பரவலான ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கிறதால், மாநில மற்றும் மத்திய வாரியங்கள் முழுவதும் 'ஒரே சீரான தன்மையை' கொண்டு வர, இடைநிலை மற்றும் மேல்நிலை நிலைகளில் மாணவர்களை மதிப்பிடுவதற்கு ஒரு 'பெஞ்ச்மார்க் கட்டமைப்பை' உருவாக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் (SCERT) பிரதிநிதிகளுடன் ஒரு தொடர் கூட்டங்களை நடத்தி திட்டத்தைச் செயல்படுத்த ஒரு பொதுவான புரிதலுக்கு வந்துள்ளது, அதன் ஒரு பகுதியாக புதிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுகிறது. இதையும் படியுங்கள்: செமஸ்டர் தேர்வு முடிவுகள் எப்போது? சென்னை பல்கலை. அறிவிப்பு திட்டமிடப்பட்டுள்ள ஆணையம் PARAKH (செயல்திறன் மதிப்பீட...