
NEET UG 2022 : இன்று வெளியாகிறது நீட் விடைக்குறிப்பு.. எப்படி சரிபார்ப்பது ? முழு விவரம் இதோ ! 2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதித் தேர்வான 'நீட்' தேர்வு ஜூலை 17 ம் தேதி அன்று நடத்தப்பட்டது. வழக்கம் போல், இந்த ஆண்டும் நீட் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டது, தேர்வர்களுக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை அல்லது நீட் UG (NEET UG 2022) விடைக்குறிப்பு மற்றும் முடிவுக்கான வெளியீட்டு தேதியை தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் அறிவித்தது. ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் NEET UG விடைக்குறிப்பு வெளியிடப்படும் எனவும், NEET UG தேர்வு முடிவு 2022 செப்டம்பர் 07, 2022-க்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. Nta.ac.in, neet.nta.nic.in என்ற 2 இணையதளங்கள் மூலமாக தேர்வர்கள் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பை சரிபார்க்கலாம். நீட் 2022 தாளின் அனைத்து தொகுப்புகளுக்கான விடை...