Posts

Showing posts from August 28, 2022
Image
  TN TET தேர்வர்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நாளை நடைபெறுகிறது.! அரசு பணிக்கான தேர்வை எழுதுபவர்களுக்கு உறுதுணையாக பல இணையதளங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் மாதிரி வினாத்தாள் முதல் தேர்வு தேதி, அறிவிப்பு மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. TN TET தேர்வு: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் பெறப்பட்டது . பின்னர் TET முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முதல் முறையாக கணினி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு TRB இணையதளம் வாயிலாக 15 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பதாரர்களுக்கு ...
Image
  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்.. சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நடப்பாண்டில் 2955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இனவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்து தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது. இந்த எழுத்துத் தேர்வின் முடிவுக...
Image
  செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் - உயர்கல்வித்துறை அமைச்சர்..!! அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1.5 லட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஆகஸ்ட் 20 முதல் 23-ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் (ஆக. 25) தொடங்கி அக். 23-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித்த...
Image
  TNPSC குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் குறையும். காரணம் இதுதான்! TNPSC Group 4 VAO exam expected cut off and Vacancy details: தமிழக அரசு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிட அதிகரிப்பு காரணமாக, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதேபோல் குரூப் 2 நிலைகளிலும் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. எனவே குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை விட, நிரப்பப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது குரூ...