.jpeg)
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ்களை பதிவேற்றலாம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து தமிழ் வழியில் படித்ததற்கான முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுள்ளவர்கள் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் அதற்குரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020 - 21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் ஜூலை 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிப்பின்போது முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான கல்வி தகுதிகளை தமிழ் வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்...