Posts

Showing posts from August 25, 2022
Image
  அரசு பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிக்கல் அரசு பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் 2300-க்கும் அதிகமான அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கொரொனோ காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் செயல்படாத சூழலில் தற்போது வழக்கமான வகுப்புகள் செயல்பட துவங்கி உள்ளது. இந்நிலையில் 4000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வது எப்படி என கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது காலி பணியிடங்கள் எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்துள்ளது. . குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள அர
Image
அரசியல்வாதிகள் PET (political eligiblity test) தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்தலில் நிற்க வேண்டும் என்ற சட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யுமா? ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு, பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு, மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு, மத்திய ஆசிரியர் பணிக்கு ctet தேர்வு, எதற்கு எடுத்தாலும்  தகுதித்தேர்வு வைக்கிறது அரசு காரணம் கேட்டால் தகுதியான நபர் எங்களுக்கு வேண்டும் என்பதால் தான் தேர்வு வைத்து பணி நியமன ஆணை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள்.  MLA, MP, கவுன்சிலர், வார்டு உறுப்பினர் பதவிக்கு வருபவர்கள் மக்களுக்கு தகுதியான அரசியல் வாதிகள் கிடைக்க political eligiblity test(PET) வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் தான் தகுதியான அரசியல் என்று சான்றிதழ் பெற்றால் தான் தேர்தலில் நிக்க முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். வகுப்பு அறையில் 30 மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பயிற்சி பெற 3 ஆண்டுகள் பட்டய படிப்பு படித்து 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி பெற்று மொத்தம் 5 ஆண்டுகள் படித்து முடித்து தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை
Image
 8-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 8-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு அக்டோபர் 1-ம் தேதி 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6 முதல் 10-ம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தட்கலில் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் போது, பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.  ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 10-ம் தேதி தமிழ், 11-ம் தேதி ஆங்கிலம், 12-ம் தேதி கணிதம், 13-ம் தேதி அறிவியல், 14-ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் காலை 10
Image
 "3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம்.." - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் ! கேள்வி 5 : அரசுப் பள்ளிகளில் 17 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் தேவை உள்ளது. இந்த விவகாரத்தை கல்வித்துறை மெத்தனமாக கையாள்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே. பதில் : மெத்தனம் எதுவும் இல்லை . மாணவர்களின் நலனுக்காகவே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் இறங்கினோம். அதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு மாணவர்களின் கற்றலுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறோம். தீர்ப்பு வந்த பிறகு, அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். இதற்கிடையே விரைவில் 3,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேள்வி 6 : புதிய ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பரிசீலனை செய்யாமல், மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது ஏன்? மாணவர்களின் கற்றல் திறனும், கற்பித்தல் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் கால