Posts

Showing posts from August 24, 2022
Image
 ' அமைச்சர் ஃபெயில்'. அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து செய்தி வெளியீடு ; நாளேட்டை எரித்த உதயநிதி ரசிகர்கள்!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டதாக, அந்த நாளேட்டை எரித்து கோவையில் உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதந்தோறும் வெளியிடப்படும் பிரபல தனியார் நாளேட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவருடன் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ள புகைப்படத்துடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சொதப்பலில் பள்ளிக்கல்வித்துறை, அழுத்தத்தில் ஆசிரியர்கள், அந்தரத்தில் பயிற்சி மையம், அமைச்சர் ஃபெயில் என பல்வேறு தலைப்புகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு செய்திகளை வெளியீட்டுள்ளதாக கோவை மாவட்ட மாநகர தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாளேட்டினை எரித்து இதற்கு எதிராக கண்டனம் கோஷங்களை எழுப்பினர்...
Image
  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன. வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தற்போது 72 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மழலையர் பள்ளி, துவக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டும் அதிகளவு மாணவர்கள் சேர்ந்தனர். அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கையை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, தரமான கற்றல் பண...