சப்-கலெக்டர், டிஎஸ்பி உள்பட 92 இடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம் துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் துணை கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்பட பல்வேறு துறைகளில் 92 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி வெளியிட்டது. அறிவிப்பு வெளியானது முதல் டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 11.59 மணி வரை தேர்வர்கள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர். இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விண்ணப்பங்கள்
Posts
Showing posts from August 23, 2022
- Get link
- X
- Other Apps
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணைத்தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 24ஆம் தேதி மாலை 3 மணிக்கு http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றைப்பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு 29ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்குச்சென்று கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் அல்
- Get link
- X
- Other Apps
TNPSC - குரூப் 5 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப்5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிதாக பதிவு செய்வதற்கு ரூ.150 கட்டணமும், தேர்வு கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. செப். 26 - 28ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம். டிசம்பர் 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. இந்த இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..! கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணை தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று (23.08.2022) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து கொள்ளலாம் எனவும் மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் வருகிற 23.08.2022 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 03.00 மணி தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன், "NOTIFICATION < SSLC SUPPLEMENTARY EXAM, AUG 2022< PROVISIONAL MARK S