Posts

Showing posts from August 21, 2022
Image
 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இதையடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது. மேலும் காலாண்டு தேர்வு விடுமுறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும். 11 மற்று...
Image
  தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் காலியாக இருக்கின்ற உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படும் கீழ்க்காணும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய , கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 18.09.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
Image
  விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.. டிஆர்பி நடத்தும் தேர்வில் புதிய மாற்றம்.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 24 முதுநிலை விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என, மொத்தம் 155 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாற்றுதிறனாளிகளுக்கு தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
Image
  புதிய அறிவிப்பு!! இணைய வழியில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு!! அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தகுதி தேர்வை நடத்தும் தேர்வு முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் டெட் தேர்வு நடைபெறவில்லை. அதனால் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டது. கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பபதிவுகள் நடைபெற்றது. சுமார் 4.5 லட்சம் பேர் இந்த TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தற்போது தேர்வு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்தாண்டு முதல் முறையாக T...
Image
  முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்: ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பு 2020- 2021ஆம் ஆண்டுக்கான முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌, உடற்கல்வி இயக்குநர்‌ நிலை- 1, கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை - 1 நேரடி நியமனத்தில் சான்றிதழ்‌ சரிபார்ப்பு குறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020-2021 ஆம்‌ ஆண்டு முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்‌ , உடற்கல்வி இயக்குநர்‌ நிலை .1 / கணினிப்‌ பயிற்றுநர்‌ நிலை.1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை எண்‌. 01/ 2021 ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து 12.02.2022 முதல்‌ 20.02.2022 வரை கணினி வழித் தேர்வு (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்‌ 04.07.2022 அன்று இந்த வாரியத்தால்‌ இவளியிடப்பட்‌ டன. தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்‌ சரிபார்ப்பு ஆயத்த பணிகள்‌ நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித்‌ தகுதிகளை தமிழ் வழியில்‌ உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள்‌ தெரிவித்துள்ளனர்‌. ஆனால்‌, அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும்‌போது முறையா...
Image
  டிஆர்பி-யில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்! விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.  அதேசமயம் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  பிற மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.