Posts

Showing posts from August 17, 2022
Image
  மைதானத்தில் விளையாடுங்கள் செல்போன் வேண்டாம் - மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ் பள்ளியில் பெரியவர்கள் சிறியவர்கள் என்பதெல்லாம் கிடையாது அனைவரும் குழந்தைகள் தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கேற்றினர். இதையடுத்து மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர்,மாணவ, மாணவிகள் அனைவரின் கவனமும் படிப்பு, படிப்பு, படிப்பு என்பதில் தான் இருக்க வேண்டும், வெளியில் கூட விளையாட செல்லுங்கள் ஆனால் வீட்டில் இருந்து கொண்டு டிவி பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட வேண்டும், புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும், பள்ளியில் பெரியவர்கள் சிறியவர்கள் என்பதெல்லாம் கிடையாது அனைவரும் குழந்தைகள் தான். மாணவச் செல்வங்கள் அறிவாளிகளாக இருக்கிறீர்கள் என்பதை விட நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதைத் தான் எண்ணுகிறோம். அத
Image
  அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும்- பாமக 7 ஆண்டுகள் ஆன பிறகும் பணி நிலைப்பு ஆணை வழங்காமல் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை போக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த உதவி பேராசிரியர்களுக்கு இன்னும் பணி நிலைப்பு ஆணை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் பெறமுடியாமல் இருக்கிறது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவி பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் அலட்சியத்தால் உதவி பேராசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும். தமிழக அரசுக்கு சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்