Posts

Showing posts from August 13, 2022
Image
  ஒரே நாடு ஒரு தேர்வு: JEE, NEET, CUET நுழைவுத் தேர்வுகளை இணைக்க UGC திட்டம் One Nation One Entrance: JEE (Main), NEET to be merged with CUET for students' benefit, says UGC Chief: அடுத்த கல்வியாண்டில் இருந்து பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வுகளை பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுடன் (CUET-UG) இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகளை ஆராய நிபுணர்கள் குழுவை, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்க உள்ளது. இதுகுறித்து யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஜே.இ.இ (மெயின்) மற்றும் நீட் தேர்வுகளை CUET என்ற பெரிய குடையின் கீழ் கொண்டு வருவது மாணவர்களின் சுமையை குறைக்கும், மேலும் இந்த யோசனை தேசிய கல்விக் கொள்கை, 2020 உடன் ஒத்துப்போகிறது என்று கூறினார். JEE (மெயின்) தேர்வு என்பது நாட்டிலுள்ள முதன்மையான பொறியியல் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். NEET என்பது அனைத்து இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாகும். தற்போது நடைபெற்று வரும் CUET-UG தேர்வு, 2023-24 ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு முறையாவது நடைபெற வாய்ப்புள்ளது என்று ஜெகதே...