Posts

Showing posts from August 11, 2022
Image
  பணி நிரந்தரம் கோரி மாநாடு நடத்த பகுதிநேர ஆசிரியர்கள் திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பதாக உறுதி கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்தது. 2012ம் ஆண்டு மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பல்வேறு காரணங்களினால் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. குறைவான ஊதியம் என்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே விதிமுறையை திருத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியமர்த்தி புதிய அரசாணையை அமுல் செய்யவேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பணி நிரந்தர கோரிக்கை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தமிழகத்தில் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்...
Image
  ஒரே நாளில் இரு தேர்வுகள்'டெட்' தேர்வு தேதி மாறுமா? சென்னை:ஆசிரியர் தகுதி தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறைக்கு, தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்கள், 'டெட்' எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் அறிவிக்கப்பட்டு, 'ஆன்லைன்' வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.விண்ணப்பித்தவர்களில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் தகுதிக்கான, முதல் தாள் தேர்வு, வரும் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு, அடுத்த மாதம் 10 முதல், 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது.தேர்வு தேதி மாற்றத்தால், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். ஏனெனில், அறநிலையத் துறை செயல் அலுவலர் பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், அடுத்த மாதம் 11ம் தேதி போட்டி தேர்வு ...