Posts

Showing posts from August 10, 2022
Image
  பொறியியல் மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 22,000பேர் விண்ணப்பித்துள்ளனர் .கடந்த ஆண்டை விட 5 ,000 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . இவர்களில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் எண்ணிக்கை 22 ,000 என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 17,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 5,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், 11,000 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆண்டு 7000 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த ஆண்டு கூடுதலாக இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Image
  889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணபிக்கலாம் 889 பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வுக்கு தகுதியுடையோர் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று எம்ஆர்பி தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மருத்துவ பணியில் 889 பார்மஸ்சிஸ்ட் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியுடையோர் www.mrb.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழி அடிப்படையில் நடைபெறும். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் 1.7.2019 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டிப்ளமோ முடித்திருப்பவர்கள் சான்றிதழை தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து...
Image
  TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?.. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய தகவல்..!!!! தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். அவ்வகையில் கடந்த மே மாதம் 5,413 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது. ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஆகஸ்ட் மாதம் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.சமீபத்தில் குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியலில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் பழங்குடியினர்,மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்து ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவை சேர்ந்த தேவர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான பதிலளித்திருந்தால் முதன்மை தேர்விற்கு முன்னேறி விடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்...