டிஎன்பிஎஸ்சி தேர்வு.. தமிழக அரசு புதிய அறிவிப்பு..! நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி மூலமாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Posts
Showing posts from August 8, 2022
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... வனத்தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து செப்டம்பர் 6 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: வனத்தொழில் பழகுநர் காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,38,500 வயதுவரம்பு: 01.04.2022 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயது நிறைவடைந்தவராகவும் இருத்தல் கூடாது. தகுதி: வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும் வேளாண் பொறியியல் உட்பட), சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம்,இயற்பியல், புள்ளிவிவரங்கள், வனவிலங்கு உயிரியல், விலங்கியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்...
- Get link
- X
- Other Apps
தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தற்காலிக ஆசிரியா் நியமனம் சாா்ந்து சென்னை உயா்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியா் பணிக்கு உரிய கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோவில் தேர்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 1.6.2022-ஆம் தேதி வரையில் அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரா்களின் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்களைக் கொண்ட குழு சரிபாா்த்து தகுதியானவா்களை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் நடத்த (டெமோ கிளாஸ்) அறிவுறுத்தி அதன் அ...
- Get link
- X
- Other Apps
குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரில் ஆட்சேபனை தெரிவிக்க இன்று கடைசி நாள்; அக்டோபரில் ரிசல்ட் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரில் ஆட்சேபனைகளை இன்று மாலை வரை தெரிவிக்கலாம். அக்டோபரில் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் பதவியில் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த மாதம் 24ம் தேதி நடத்தியது. இத்தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதினர். இதனால், ஒரு பதவியை பிடிக்க 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் கட் ஆப் மதிப்பெண் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சரை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்டது. அதாவது, வினாத்தாள்களுடன் கூடிய உத்தேச விடைகள் வெளியிடப்பட்டது. உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள், அதாவது ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து தேர்வு எழுதி...