
ஜெ பழி வாங்கினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்ட திட்டத்திற்கு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உயிர் பிச்சை கொடுப்பாரா? பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் தருவாரா? மே மாதம் 2010 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் 31170 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதில் 8819 பேர் வருகை தராதவர்கள் 22351 பேர் வருகை தந்தவர்கள். 22351 பேரில் 11190 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. 9176 காலிப்பணியிடம் இருக்கும் போதும் மீதம் உள்ள 11161 பேரில் பணி வழங்க வேண்டும். இந்த நேரத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்து மீதி காலி பணியிடம் போடப்படும் என்று காத்து கொண்டு இருந்தோம் ஆனால் எதிர்பாராமல் அதிமுக ஆட்சிக்கு வந்தது.9176 காலிப்பணியிடம் இருக்கிறது எங்களுக்கு பணி வழங்குமாறு அதிமுக அரசிடம் கோரிக்கை வைத்தோம் கலைஞர் ஆட்சி காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஒரே காரணத்திற்காக 11161 பேருக்கு அதிமுக ஆட்சியில் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது. ...