
மாணவர் தற்கொலையை தடுக்க என்ன வழி? தோல்வியே இல்லாத வகையில் தேர்வு முறையில் தேவை மாற்றம்! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கணியாமூர் கிராமத்தின் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் மரணமும், அதன் தொடர்ச்சியாக நடந்த கலவரமும் தமிழகத்தில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் மாணவ - மாணவியர் அடுத்தடுத்து தற்கொலை செய்து உள்ளனர். இது குறித்து, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் கூறியதாவது:உளவியல் ரீதியாக இதை, 'மந்தை நடத்தை' என்று சொல்கிறோம். அதாவது ஒரு நிகழ்வு தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடக்கும்போது, தானும் அதேபோன்று செய்ய வேண்டும் என்ற மனநிலை மாணவ - மாணவியருக்கு உருவாகிறது. நீண்ட காலம் தனிமையில் இருப்போர், மனதிற்குள் எதையாவது வைத்து புழுங்கி கொண்டிருப்போர் தற்கொலைக்கு முயற்சிக்கக் கூடும்.தொடர் தற்கொலைகள் நிகழ்ந்து, அது பரபரப்பான செய்தி ஆகும்போது, அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்களுக்கு பிள்ளைகள் மீது பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு குழந்தை மனம் விட்டு பேசுக...