கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தேதி அறிவிப்பு! கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியைக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 தேதி முதல் தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 12 ஆம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். 163 கலை, அரசு அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் ,சில நாட்களுக்கு முன்பு தரவரிசை பட்டியல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதிலும் இந்த கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Posts
Showing posts from August 2, 2022
- Get link
- X
- Other Apps
TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியானது குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். வரும் ஆகஸ்ட்8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும். சரியான வி...