
பள்ளிகளில் ஆசிரியரை நியமிக்க புதிய முறை! தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்களுக்கான 80 நாட்கள் பயிற்சியின்போது ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரிய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பிஎட் பட்டப்படிப்பும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடம் நடத்துவதற்கு எம்எட் பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும். பி.எட் மற்றும் எம்எட், பிஎச்டி பட்டப்படிப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. ஆசிரியர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாக...