" 10,300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்"... அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!!! அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதியதாக 1,0300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: "ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் பழுதான பள்ளி கட்டிடங்களை இடித்து புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 31 பள்ளிகள் பழுதடைந்துள்ளது. இவற்றை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தற்போது மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ...
Posts
Showing posts from July 31, 2022
- Get link
- X
- Other Apps
கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புக்கு தரவரிசை பட்டியல் 1ம் தேதி வெளியீடு? : தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி படிப்புகளில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. நடப்பு ஆண்டிலும் விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். அதன்படி, விண்ணப்பப்பதிவு செய்ய கடந்த 27ம் தேதி கடைசி நாளாக இருந்தது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 விண்ணப்பங்களுக்கு கட்டணங்கள் செலுத்தியிருப்பதாகவும் உயர்கல்வித் துறை அளித்த புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ,...
- Get link
- X
- Other Apps
TNSED செயலில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு TNSED செயலில் மட்டுமே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கான செயலி வருகைப்பதிவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. விடுப்பு, தற்செயல் விடுப்பு உள்ளிட்டவற்றை செயலி வழியாக மட்டுமே ஆசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் வருகைப்பதிவு நடைமுறை அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
- Get link
- X
- Other Apps
பி.பார்ம், நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது? பி.பார்ம், மற்றும் நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழகத்தில் சமீபத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்யும் அவகாசம் முடிவடைந்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் அடுத்த கட்டமாக பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலம் இருப்பதால் அதற்குள் மாணவ-மாணவிகள் தங்களது விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பி.பார்ம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
- Get link
- X
- Other Apps
TN TRB Polytechnic Lecturer: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: தேர்வானோர் பட்டியலை வெளியிட்ட டிஆர்பி கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், மின்னணு பொறியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களின் பட்டியலை டிஆர்பி வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கணினி வழித் தேர்வுகள் 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 08.03.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில், பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகு...
- Get link
- X
- Other Apps
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசியர்கள் பணி; வலுக்கும் எதிர்ப்பு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 119 தொடக்கப்பள்ளிகளும், 92 நடுநிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.53% ஆக இருந்தது. 32 உயர்நிலைப் பள்ளிகளில், கிட்டத்தட்ட 13 பள்ளிகள் 90%க்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றன. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடநெறிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றனர். இந்நிலையில், சென்னை பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த வாரம் ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், சென்னை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு, ஆசியர்கள் பற்றாக்குரை, கல்வியின் தரம், தேர்ச்சி விகிதம், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்ப...
- Get link
- X
- Other Apps
இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது. கொரோனா பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி"திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி வளாகங்களுக்கு வெளியே உள்ள இல்லம் தேடி மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக, மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்கு அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுக்களும் தங்கள் அளவில் கொடுக்கப்பட்ட பிரத்தியோக பணிகளை செயல்படுத்தி வருகின்றன. வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் ப...