
தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் - கல்வியாளர்கள் கருத்து! தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,559 இடங்கள் காலியாக இருந்தும், 152 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 4,910 இடங்கள் காலியாக இருந்தும் 2,069 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக நிரப்ப இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் என 2,221 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். எனவே 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது. தொகுப்பூதிய விவரம்: தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநில...