Posts

Showing posts from July 26, 2022
  10ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் நாளை (27.07.2022) வெளியீடு! நடைபெற்ற மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின் மீது மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் 27.07.2022 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படும் . www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள் சென்று " SSLC MAY 2022 RETOTAL RESULT " என்ற வாசகத்தினை CLICK செய்த பின்னர் , தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சானறிதழ்களை மதிப்பெண் மாற்றங்களுடன் 27.07.2022 பிற்பகல் www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.
Image
  TNPSC குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? TNPSC Group 4 Exam 2022 cut off mark details here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வில் தமிழ் பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க நேரம் போதவில்லை என சில தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழ் பகுதி எளிதாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ் கட்டாய பாடமாக மாற்றியுள்ளதால், இதற்கு முன்னர் வரை ஆங்கிலம் படி
Image
  பொறியியல் படிப்புகளின் மீது ஆர்வம் காட்டும் மாணவர்கள்: 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வுக்காக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்   பொறியியல் கலந்தாய்விற்காக கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களிடையே பெறியியல் படிப்புகளின் மீது மீண்டும் ஆர்வம் ஏற்பட காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பாவுக்கும், அரசுக்கும் இடையே இருந்த மோததால் ஏற்பட்ட குழப்பமான சூழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்ததால் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தன.  2014ம் ஆண்டு 1,90,000 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்தன.  2018-2019 கல்வியாண்டில் காலியாக இருந்த 1,78,000 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் வெறும் 71,900 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இதற்கு, அடுத்த இரண்டு கல்வியாண்டுகளிலும் இதே போக்கே நீடித்தது. ஆனால், நடப்பாண்டில் இந்தநிலை முற்றிலும் மாறி இதுவரை 2,00
Image
  பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12ம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமானதால் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான காலவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் கடந்த 22-ந்தேதி வெளியானது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி நாளை (ஜூலை 27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதேபோல் 163 கலை
Image
  தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர விரும்பாத பட்டதாரிகள்.. தற்கால ஆசிரியர் பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மொத்தமுள்ள 11,825 இடங்களில் இதுவரை 2,221 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50, 648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், தற்காலி ஆசிரியர் பணியில் சேர பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேரும் என 2,221 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் இன்னும் 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்ப
Image
  மாணவர்களின் குறை கேட்க புதிய திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..! கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கே.பி.ஆர்.கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். அரசாணைகள், 101 மற்றும் 108ல் திருத்தங்கள் செய்யப்பட்டு, முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களின் குறைகளை கேட்க 'மாணவர் மனசு' திட்டம் உள்ளது. அதே போல், ஆசிரியர்களின் குறைகளை கேட்க, 'ஆசிரியர் மனசு' எனும் பெட்டி, பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்திலும், என் வீட்டிலும் வைக்கப்படும். அதன்மூலம் வரும் கோரிக்கைகள் உடனுக்குடன் பரிசீலிக்கப்படும். மாணவர்களின் கலை, பண்பாட்டு திறமைகள் ஒருங்கிணைக்கப்படும். மாற்றுத்திறன் மற்றும் தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, வீட்டு வழி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். ஆன்லைன் மூலம் மாணவர்களின் குறைகளை கேட்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
Image
  TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்...!!!! தமிழகத்தில் கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன. அவ்வகையில் கலந்த ஜூலை 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்களுக்கு 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் தேர்வு எழுதினார். 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திறந்த நிலையில் 3 லட்சத்திற்கும் மேலானோர் தேர்வை எழுத வரவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள்வெளியாகலாம் என்றும் நவம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடைபெறலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.