Posts

Showing posts from July 24, 2022
Image
  குரூப் 4 தேர்வு; 84% பேர் பங்கேற்பு- டிஎன்பிஎஸ்சி தமிழ்கத்தில் நடந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,301 குரூப் 4 பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது. குரூப் 4 தேர்வு இந்த குரூப் 4 தேர்வை 84 சதவீதம் பேர் எழுதியுள்ளனர். மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 18.50 லட்சம் பேர் தேர்வை எழுதியதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இத்தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வுக்காக கொடுக்கப்பட்ட 3 மணி நேரம் போதவில்லை என்றும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். யுபிஎஸ்சி தேர்வுக்கு க...
Image
  TNPSC Group 4: 6 நிமிஷம் லேட்.. குரூப் 4 தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட 40 பேர்.. கதறி அழுத தேர்வர்கள்! சீர்காழியில் 40க்கும் மேற்பட்டோருக்கு குரூப் 4 தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறியதால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தாமதமாக வந்தனர். குறிப்பாக 8.59 மணிக்குள் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்தனர். தாமதமாக வந்ததால் அவர்கள் தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வர்கள் முறையிட்டபோதும், அவர்களை அனுமதிக்க சீர்காழி வட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தி...
Image
  தமிழகத்தில் தொடங்கியது குரூப் 4 தேர்வு.. தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு : 5 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்கள் அழுது கதறிய காட்சி!! தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் நடக்கிறது. குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இந்த தேர்வு இன்று நடக்கிறது. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். 9 மணிக்கு ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் டி.என்....
Image
  TET தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களே. வரும் 27-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்.! இல்லை என்றால் உங்களுக்கு சிக்கல். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா சமிபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு...