
TNPSC Group 4 Exam: மைனஸ் மார்க் அபாயம். தேர்வு அறையில் இந்த 3 முக்கிய விஷயங்களை மறக்காதீங்க! TNPSC group 4 exam minus mark to these mistakes details here: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பலருக்கும் தெரியாத விஷயம், இந்த தேர்வில் மைனஸ் மார்க் உண்டு என்பது . எது எதற்கெல்லாம் மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. ஆனால், தேர்வர்கள் கீழ்கண்ட தவறுகளைச் செய்தால் அவர்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும். த...