Posts

Showing posts from July 22, 2022
Image
  பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு வழக்கு: அரசு தரப்பில் தகவல் வேண்டும் - நீதிமன்றம் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய கோரிய வழக்கில், வழக்கு குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கலைச் சேர்ந்த தண்டபாணி, மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் உயர்நீதிமன்றமதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாங்கள் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பின் பிஎஸ்சி கணிதம், எம்எஸ்சி கணிதம் ஆகிய படிப்புகளை தமிழ் வழியில் கல்வி கற்றோம். கடந்த 2019 நவம்பர் 29ஆம் தேதி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் வேலைக்கான 1060 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பணிக்காக தமிழ் வழி இட ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்தேன். பின் தேர்வு நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான அறிவிப்பு 2022, ஜூலை 8ஆம் தேதி வெளியானது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை. நான் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு முறையாக தமிழ் வழி ...
Image
  11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 26 ஆம் தேதி வெளியீடு! 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை ஜூலை 26 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வினை எழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை ஜூலை 26 ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வு குறித்த விவரங்களை தனித்தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உ...
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO தேர்வர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.. இதோ முழு விபரம்...!!!!! தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணி இடங்களுக்காக நடத்தப்படும் குரூப்-4 தேர்வானது சென்ற 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதையடுத்து இந்த வருடம் தேர்வு நடந்த முடிவு செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் அதற்குரிய அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அவற்றில் 7,382 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வை 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் எழுதலாம். வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) தேர்வு நடைபெறவுள்ள நிலையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் தேர்வு அறையில் தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. வழிமுறைகள் # தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வுக் கூடத்திற்கு வரவேண்டும். 8:59-க்குப் பின் வரும் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். # OMR தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டதும் அது உங்களுக்கு உரியத...
Image
  காவலா் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் காவலா் பணிக்கு சேர விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோவு வாரியம் மூலம் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்திற்கு பொதுத்தோவு நடைபெறவிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரா்கள் முன்னாள் படைவீரா்கள் பணியில் இருந்து 3 ஆண்டுக்குள் விடுவிக்கப்ட்டிருக்க வேண்டும். படைப்பணியில் உள்ள ராணுவத்தினா் கடைசி தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் விடுவிக்கப்படுபவராக இருந்தால் தகுதியுடையவா் ஆவாா். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநரை நேரில், அல்லது 0461-2902025 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  பொறியியல், கலைக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு கால அவகாசம்.. உயர்கல்வித்துறை அதிரடி.! 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி தேதி ஜூலை 27-க்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு & தனியார் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரியில் சேருவதற்கு, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் பதிவு செய்யும் முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையவழியில் மாணாக்கர்கள் https://www.tngasa.in/ என்ற பக்கம் வழியே வீட்டில் இருந்தவாறு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழ்நாடு மாநில பள்ளிகள் சார்பில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று காலை சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மத்திய கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சி.பி.எஸ்.இ வழியே 12 ஆம் வகுப்பு பயின்று முடித்த மாணவர்களும் மேற்படிப்புக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்வும் பொருட்டு, அரசு கலைக்கல்லூரி மற்றும் பொறியிய...
Image
  ஆசிரியர்களே கவனம் மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்.! தற்காலிக பணி நியமனம் குறித்து புதிய தகவல்.! தமிழகத்தில் 24 மாவட்டங்களில் தற்காலிகமாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சமிபத்தில் அறிவிக்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு ம...