Posts

Showing posts from July 21, 2022
Image
  தற்காலிக ஆசிரியர் நியமன வழக்கு: தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உத்தரவு தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதுள்ளது. தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சோந்த பா்வதம் என்பவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்புக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுருந்தது. மேலும், இந்த வழக்கை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்திரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், மதுரை கிளைக் தீர்ப்பும் முரண்பாடாக உள்ளதால் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உத்திரவிட்டுள்ளது.
Image
  குரூப் 1 தேர்வில் விண்ணப்பிக்க கல்வி தகுதி, வயது வரம்பு..? வெளியான அறிவிப்பு குரூப்1 தேர்வு அறிவிப்பானையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.குரூப்1 தேர்வு அறிவிப்பானையை அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. குடிமை பணி, காவல் பணி, வணிகவரிப் பணி, கூட்டுறவுப் பணி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், துணை காவலர், உதவி ஆணையர் , துணை பதிவாளார், உதவி இயக்குநர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன. குரூப் 1 முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்க...
Image
  TNPSC குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியீடு துணை ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.56,100 - ரூ.2,05,700 வயது: 21-40 கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், அக்டோபர் 30 முதல் நிலை தேர்வு நடைபெறும் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 22 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.