10ஆம் வகுப்பு துணைத்தேர்வு; வரும் 22ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்! 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை வரும் 22ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை வரும் 22ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப்பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப்பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அறிவியியல் பாட செய்முறைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்களால் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடத்தப்படும் 10ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வினை எழுத வேண்டும். இந்தத் தேர்வர்கள் முன்கூட்டியே செய்முறை
Posts
Showing posts from July 20, 2022
- Get link
- X
- Other Apps
டி.ஆர்.பி., தேர்வுகளில் தமிழ்த் தாள் கட்டாயம்! பள்ளிக்கல்வி துறை முடிவு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளிலும், தமிழ் கட்டாய தாள் கொண்டு வர பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே, தமிழக பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் வகையில், டி.ஆர்.பி., தேர்வுகளில் தமிழ் கட்டாய தாள் அறிமுகம் செய்ய, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் கட்டாயத்தாள் ஏற்கனவே அமலில் உள்ளது. அதை பின்பற்றி, டி.ஆர்.பி.,யும் தமிழ் தாளை கட்டாயமாக்கும் அறிவிப்பை, விரைவில் வெளியிடும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- Get link
- X
- Other Apps
தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்புக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சோந்த பா்வதம் என்பவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிகமாக ஆசிரியா்களை நியமனம் செய்வது குறித்து அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பியிருந்தாா். இதைத்தொடா்ந்து இந்த மனு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 21) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
- Get link
- X
- Other Apps
12-ம் வகுப்பு மாணவர்களே துணைத்தேர்வுக்கு. ஆன்லைன் மூலம் இன்று முதல் Hall Ticket.! எப்படி டவுன்லோட் செய்வது.? 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது ஹால்டிக்கெட்டைஇன்று மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.12-ம் வகுப்பு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட