Posts

Showing posts from July 16, 2022
Image
  மாநில கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கலாம் - தமிழக அரசு !! மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும், மாநில அளவில் கல்வி கொள்கையை உருவாக்குவோம் என்றும் தமிழக அரசு கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது அந்த குழுவில் பேராசிரியர்கள், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று குழு தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி மாநில கல்விக்
Image
  CTET 2022: டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு 16வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மாதம் கணினி வழித் தேர்வாக நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) இத்தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது.இதில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும். இந்நிலையில், இந்தாண்டுக்கான தகுதித் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அறிவிப்பில், 2022 வருட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும். தேர்வு நட