
தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-க்குள் முடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவு அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை ஜூலை 19-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று 24 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரிஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும்போட்டித்தேர்வு நடத்தி இப்பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும்என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால த...