
5 ஆண்டு சட்டப்படிப்புகள் : விண்ணப்பப் பதிவை துவக்கியது அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் !! தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்ட கல்லூரிகள் மற்றும் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவை துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், தரும்புரி, இராமநாதபுரம், சேலம், நாமக்கல், தேனி ஆகிய நகரங்களில் உள்ள 14 அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் சேலம், திண்டிவனத்தில் அமைந்திருக்கும் தனியார் சட்டக்கல்லூரிகளும் பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டில் வருகின்றன. இக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளான BA, LLB., BCom, LLB., BBA, LLB., BCA, LLB., பட்டபடிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றில் சீர்மிகு சட்டப் பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகத்தில் 624 இடங்களும், பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,731 இடங்களும் என மொத்தம் 2,355 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 2022 - 23 ஆம் கல்வி ஆண்டின் மாணவர் ...