
எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் அரசு / அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் / அண்ணா பல்கலைக் கழகம் / துறைகள் ( University Departments ) / வட்டார மையங்கள் ( Regional Centers ) / அண்ணாமலை பல்கலைக்கழகம் / சென்னை பல்கலைக் கழகம் / இதர பல்கலைக் கழகங்கள் / சுயநிதி பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் , சென்னை 600 025 மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் , சென்னை 600 006 அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ . முதுநிலை பட்டப்படிப்பு ( MBA / MCA ) சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள் : 1 ) விண்ணப்பிக்கும் முறை : www.gct.ac.in , www.tn-mbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும் . 2 ) விண்ணப்பத...