Posts

Showing posts from July 10, 2022
Image
  விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்!! அமைச்சர் திட்டவட்டம்!! தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்றம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வரின் ஆணைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருகிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
Image
  NEET UG 2022: நீட்தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்கள் (வழக்கம் - வழக்காறு/ கலாச்சாரம்/ சமயம்) சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக
Image
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு. மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.! தேர்வுத்துறை அறிவிப்பு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 2021-22-ம் கல்வியாண்டில் மே மாதம் நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது.  மேலும், பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2 முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இறுதி வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரும், பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு தொலைபேசி, கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று பலமுறை பள்ளி மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பு வழங்கினாலும், மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர
Image
  தமிழ்நாடு   திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம்  விழுப்புரம்-தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்னகுமார் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக்குவினால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர படிப்புகளுக்கு 2022-23ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கான கல்வி தகுதி மற்றும் கட்டணம் தொடர்பான விபரங்களை www.tnou.ac.in என்ற பல்கலைக் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கல்வி பயில விரும்புவோர் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையங்களான விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்துார், மதுரை, சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகியவற்றில் சேர்க்கைக்கான வசதியை பெறலாம்.அரசு விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. மேலும், விபரங்களுக்கு விழுப்புரத்தில் உள்ள தமி
Image
  2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு.. ஜூலை 20 வரை.. மீண்டும் ஒரு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!! 2003ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகளை எழுதவும் தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஜூலை மாத செமஸ்டர் தேர்வுக்கு www.tnou.ac.inஎன்ற இணையதளத்தில் ஜூலை இருபதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு அரியர் மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது.! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு.! 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள ஆணையில்; பள்ளிக்கல்வித்துறையில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெறும் மாணவர்களுக்கு 2011-ம் ஆண்டு முதல் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர், செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தரும் மனதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவேட்டை வழங்க வேண்டும். மேலும் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் www.tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துகொள்ளலாம். வேலைவாய்ப்பு பதிவு, கூட
Image
 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள்; TET தேர்வில் 28,984 பேர் தேர்ச்சி - பள்ளிக்கல்வித்துறை தகவல் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை விண்ணப்பித்த 1 லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்காது, பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், 'தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம். பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது; பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத